Categories
தேசிய செய்திகள்

கோடை விடுமுறை நாட்கள் குறைப்பு…. பள்ளி மாணவர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது தான் பொதுதேர்வும் நடைபெற உள்ளது. சமீபத்தில் பொதுத்தேர்வு அட்டவணையும் வெளியானது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் முறையாக நடத்தப்படாத காரணத்தினால் தற்போது மாணவர்களுக்கு வேகவேகமாக பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதோடு மட்டுமில்லாமல் பொதுத்தேர்விற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. இந்த நிலையில் ஒடிசாவில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிந்ததும் 40 நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்களுடைய கல்வித்திறனை கருத்தில் கொண்டு தற்போது கோடை விடுமுறை 11 நாட்கள் மட்டுமே என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் சோகத்தில் உள்ளனர்.

Categories

Tech |