லாரி டிரைவரை வழிமறித்து பணம் பறித்த வாலிபரை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஐந்துபனை பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். லாரி டிரைவரான இவர் வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு வந்த 3 வாலிபர்கள் திடீரென மாரிமுத்துவை வழிமறித்து மிரட்டி அவரிடம் இருந்த 13 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாரிமுத்து உடனடியாக பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் மாரிமுத்துவிடம் பணம் பறித்தது ஐந்துபனையை சேர்ந்த சசிகுமார்(26) என்பது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.