இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள தோட்ட முடையாம்பட்டியில் செந்தில்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் செல்லியம்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் செல்லியம்பாளையம் அருகே சென்ற போது திடீரென ஒருவர் குறுக்கே வந்ததால் செந்தில்குமார் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.