ஷாங்காய் நகரில் அதிகரித்துவரும் கொரோனாவை கட்டுபடுத்த போடப்பட்டுள்ள ஊரடங்கால் அந்நாட்டின் 3 ஆவது விமானம் தாங்கி கப்பல் கட்டும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் ஓமிக்ரான் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு மிக கடுமையாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அவ்வாறு போடப்பட்டிருக்கும் ஊரடங்கால் அந்நாட்டின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை கட்டும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கப்பலை சீனா அந்நாட்டு ராணுவத்தின் 73 ஆவது நிறுவன தினமான வரும் 23ஆம் தேதி தொடங்கி வைப்பதற்கு இருந்துள்ளது. ஆனால் ஊரடங்கு காரணத்தால் இதிலும் பாதிப்பு ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.