Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது?…. இதோ முழு விவரம்…!!!

ரேஷன் கார்டை தொலைத்து விட்டால், செய்ய வேண்டியவை பற்றிய  விவரங்கள்  இந்த தொகுப்பில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் ஒரு சிறந்த திட்டமாக ரேஷன் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் சாமானிய மக்கள் பெரிதும் பயன் பெற்று வரும் சூழலில், தமிழக அரசு இந்த திட்டத்தினை மையமாக வைத்து  நிறைய நல்ல காரியங்களை செய்து வருகிறது. இந்நிலையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்து இருந்தது இந்தியரசு அறிவித்து இருந்தது.

அதன்படி இத்திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்முறை படுத்தப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் மூலம் சுமார் 69 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது புலம்பெயர்ந்து வாழும் மக்கள் திடீரென தங்களது ரேஷன் கார்டுகளை தொலைத்து விட்டால், ஆன்லைனில் ஈசியாக விண்ணப்பிப்பது பற்றி கீழே விவரமாக கொடுக்கப் பட்டுள்ளது.

  • ரேஷன் கார்டு தொலைத்தவர்கள் கையில் செல்போன் இருந்தால் போதும், இந்த வேலையை வெறும் 20 நிமிடத்தில் முடித்து விடலாம். அதற்கான படிகள்,
  •  தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான அதன் பின்னர் https://www.tnpds.gov.in/ சென்று லாகின் செய்ய வேண்டும்.
  • இதையடுத்து இப்போது பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு ஒடிபி எண் வரும். அதனைக் கொண்டு சுயவிவர பக்கத்திற்கு உள்நுழைய வேண்டும்.
  • அதன் பின் TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான டேப்-ஐ பார்ப்பீர்கள். மேலும் இதில் கூடுதல் வசதிகளான பெயர் நீக்குதல், மாற்றுதல், சேர்த்தல் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.
  • மேலும் அதில் தங்களுடைய மொழியைத் தேர்ந்தெடுத்து அதன் பின்பு PDF ஃபைலை சேமிக்க, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அதன் பிறகு அந்த பக்கத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.
  • அதனை தொடர்ந்து தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால் போதும்.
  • இதையடுத்து உங்களுக்கு மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.
  • மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 1800 425 5901 என்ற ஹெல்ப்லைனில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |