Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீடுகளை உடைத்து சேதப்படுத்திய காட்டுயானை….. 8 மாத குழந்தை உள்பட 2 பேருக்கு படுகாயம்….. பெரும் பரபரப்பு….!!

குடியிருப்பு பகுதியில் புகுந்து காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே புளியம்பாராவில் கோழிக்கொல்லி ஆதிவாசி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் திடீரென ஒரு  காட்டுயானை புகுந்து வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். இந்த காட்டுயானை அப்பகுதியில் இருந்த சிலரின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது ஒரு வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்ததால் கைக்குழந்தை உட்பட 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ஆதிவாசி மக்கள் ஒன்று சேர்ந்து காட்டுயானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் யானை விவசாய நிலங்களுக்குள் சென்று வாழை, பாக்கு  போன்ற பயிர்களை நாசம் செய்தது. அதன்பிறகு மறுநாள் காலை காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பிறகு காயமடைந்த 8 மாத கைக்குழந்தை மற்றும் சிவசங்கரன் ஆகிய 2 பேரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காட்டுயானையின் அட்டகாசத்தினால் சிலரின் வீடுகள் உட்பட பொருட்களும் சேதமடைந்துள்ளது‌. எனவே நஷ்டத்திற்கு ஏற்ப வனத்துறையினர் இழப்பீடு வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |