வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை மைலப்பபுரம் வடக்கு தெருவில் அருணாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார், இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டிருந்த இசக்கி முத்து என்பவரிடம் அரிவாளை காட்டி முருகன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இசக்கிமுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.