தீயணைப்புதுறையினர் விஷ வண்டுகளை பாதுகாப்பாக அகற்றினர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு பணவடலிசத்திரம் கிராமத்தில் விவசாயியான செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது . இந்நிலையில் தோட்டத்தில் இருக்கும் சோள படப்பிற்குள் இரண்டு இடங்களில் விஷ வண்டுகள் இருந்துள்ளது.
இதுகுறித்து செல்லப்பா தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் இரண்டு இடங்களில் இருந்த கடந்தை வண்டுகளை பாதுகாப்பாக அகற்றிவிட்டனர்.