தி.மு.க கட்சியின் கொடியேற்று விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் 69 அடி உயர கொடி கம்பம் உள்ளது. இந்த கொடிக்கம்பத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வேலு கலந்து கொண்டு கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் தலைமை தாங்கினார்.
இதில் எம்.எல்.ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், உதய சூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் விஜயகுமார், ஆசீர்வாதம், பிரசன்னா, ஜெயராமன், சுப்பிரமணியன், திருநாவலூர் ஒன்றியக்குழு தலைவர் இளங்கோவன், உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயலாளர்கள் ராஜவேல், வைத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.