இலங்கையில் அரசிற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் தலையிடமாட்டோம் என அந்த நாட்டு ராணுவம் அறிவித்திருக்கிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த நிலையில் போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை அரசு பயன்படுத்தக் கூடும் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் பிறப்பிக்கப்படும் சட்டவிரோத உத்தரவுகளை ராணுவம் பின்பற்ற வேண்டாம் என முன்னாள் ராணுவ தளபதியான சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களில் தலையிடமாட்டோம், எனவும் வன்முறை ஏற்பட்டு காவல்துறை உதவியை நாடினால் மட்டுமே களமிறங்க திட்டம் எனவும் அந்த நாட்டு ராணுவம் விளக்கம் அளித்திருக்கிறது.