Categories
சினிமா

பிரபுதேவா-வடிவேலு சந்திப்பு…. வெளியான வீடியோ…. வைரல்…..!!!!

நடிகரான பிரபுதேவா மற்றும் நகைசுவை நடிகரான வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியாகிய படம் தான் “மனதைத் திருடி விட்டாய்”. அத்திரைப்படத்தில் பிரபுதேவா, வடிவேலு, விவேக் போன்றோர் காமெடியில் அசத்தியிருப்பார்கள். இப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகளைப் பார்ப்பவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.

அதிலும் குறிப்பாக ஒரு காட்சியில் வடிவேலு, “சிங் இன் த ரெயின், ஐ வான்ட் சிங் இன் த ரெயின்” என்று பாடி நடிக்கும் காட்சியை யாராலும் மறக்க முடியாது. இந்த நிலையில் பிரபு தேவா மற்றும் வடிவேலு இருவரும் தற்போது சந்தித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் வடிவேலு “சிங் இன் த ரெயின்” பாடலைப்பாடி பிரபுதேவாவைக் கட்டிப்பிடித்து மகிழ்ந்துள்ளார்.  ‘நட்பு’ என ஒரே ஒரு வார்த்தையில் அந்த சந்திப்பு குறித்து பிரபுதேவா பதிவிட்டுள்ளார்.

 

Categories

Tech |