ஆசிரியர் தகுதி தேர்வை பிஎட், டிடிஎட்(D.Ted) இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் எழுதலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்பட்டன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13-ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பம் ஏப்ரல் 13ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அதற்கான கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். தேர்வு வாரியத்தின் சர்வர் முடங்கியதால், b.ed பட்டப் படிப்புக்கான முதலாமாண்டு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத காரணத்தாலும் பலரால் விண்ணப்பிக்க முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.