தற்போதைய காலகட்டத்தில் எத்தனையோ முதலீடுகள் மற்றும் சொத்துக்கள் இருந்தாலும் சேமிப்பு கணக்கு என்பது அனைவருக்கும் அடிப்படைத் தேவை. சேமிப்பு கணக்குகள் பணத்தை சேமிப்பதற்கும், பணத்தை எடுப்பதற்கும், மற்றவர்களுக்கு பணம் அனுப்பவும் உதவுகின்றது. இதில் வட்டியும் அதிகளவு கிடைக்கிறது. எப்போது வேண்டுமானாலும் நாம் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். சேமிப்பு கணக்குகளுக்கு ஒவ்வொரு நாளும் வட்டி கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இருக்கும் மீதி தொகைக்கு வட்டி கணக்கிடப்பட்டு காலாண்டு வாரியாக அல்லது அரை ஆண்டு வாரியாக வட்டி தொகை நேரடியாக பயனாளிகளுக்கு வழங்கப்படும். சேமிப்பு கணக்கிடும் வட்டி வருமானம் கிடைப்பதால் எந்த வங்கி அதிக வட்டி வழங்குகிறது என்பதை நாம் தெரிந்து கொண்டு அக்கவுண்டை தொடங்கலாம்.
சேவிங்ஸ் அக்கவுண்ட்டுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்:
HDFC Bank (எச்டிஎஃப்சி வங்கி) – 3.50%
Axis Bank (ஆக்ஸிஸ் வங்கி) – 3.50%
Kotak Mahindra Bank (கோட்டக் மஹிந்த்ரா வங்கி) – 3.50%
Yes Bank (யெஸ் வங்கி) – 5.25%
Bandhan Bank (பந்தன் வங்கி) – 6%
Lakshmi Vilas Bank (லக்ஷ்மி விலாஸ் வங்கி) – 3.75%
IndusInd Bank (இண்டஸ் இண்ட் வங்கி) – 5%
RBL Bank (ஆர்பிஎல் வங்கி) – 6%