Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாகனம்…. ரயிலில் மோதி கோர விபத்து…. இருவர் பலி…!!!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வாகனத்தின் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டதில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் இருக்கும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹாரிஸ் கவுன்டியின் வடகிழக்குப் பகுதியில் ஒரு ரயில் நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றது. அந்த ரயில் ஹூஸ்டன் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 12 மைல்கள் தூரத்தில் சென்று கொண்டிருந்தது.

அந்த சமயத்தில், அந்த வழியே சென்று கொண்டிருந்த வாகனம் தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்த போது அதன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. அந்த ரயிலில் இருந்த 81 பயணிகளும் காயம் ஏற்படாமல் தப்பினர். ஆனால், ரயில் மோதியவுடன் வாகனம் தீப்பற்றி எரிந்தது. அந்த வாகனத்திலிருந்த ஆண், பெண் இருவரும் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |