Categories
தேசிய செய்திகள்

சசிகலா, இளவரசி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு…. வெளியான உத்தரவு…..!!!!!!

சிறையில் சசிகலா, இளவரசி போன்றோருக்கு சொகுசுவசதி செய்து கொடுக்க அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கில், சசிகலா, இளவரசி உட்பட சிறைத்துறை அதிகாரிகளுக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து ஊழல்ஒழிப்பு நீதிமன்றம் பெங்களூரில் நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதாவது பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா சிறைச்சாலையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க சில அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், சசிகலா, இளவரசி இருவரும் கோர்ட்டில் கடந்த மாதம் 11 ஆம் தேதி ஆஜராகினார்கள். இந்நிலையில் 3 லட்சம் ரூபாய்க்கான பிணைபத்திரம் சமர்ப்பித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

அதன்பின் வழக்கு விசாரணை நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் நீதிபதி லட்சுமி நாராயண பட் நேற்று விசாரணை மேற்கொண்டார். சசிகலா, இளவரசி போன்றோர் நேரில் ஆஜராகவில்லை. மாற்றாக அவரது வழக்கறிஞர்கள் ஆஜராக விலக்குகோரி மனு தாக்கல் செய்தனர். அதுமட்டுமல்லாமல் சிறைத்துறை இணை கண்காணிப்பாளர் சுரேஷ், காவலர் கஜராஜ் மகனுார் போன்றோர் இவ்வழக்கில் ஆஜராக விலக்குகோரி மனு தாக்கல் செய்தனர். அனைவரது மனுக்களையும் நீதிபதிகள் ஏற்றுகொண்டனர். அதனை தொடர்ந்து வழக்கு விசாரணை ஜூன் 6ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

Categories

Tech |