‘காதல்’ சுகுமார் நடித்துள்ள ‘தொடாதே’ படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசிய போது, உண்மையில் சிறிய முதலீட்டில் எடுத்து பிறகு பெரிதாக வெற்றி பெறும் படங்கள் தான் பெரிய படம். பெரிய முதலீட்டில் எடுத்து தோல்வியடையும் படங்கள் சிறிய படம் தான். பல கோடி ரூபாய் செலவு செய்து படம் தயாரிக்கிறார்கள். ஆனால் 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுத்த படம், 30 கோடி ரூபாய் தான் வசூல் செய்கிறது. இருந்தாலும் ஹீரோக்கள் மட்டும் தங்களின் சம்பளத்தை 110 கோடி ரூபாய்க்கு உயர்த்தி விடுகிறார்கள்.
இப்ப கூட, 65 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிட்டு இருந்த நடிகர், 105 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். ‘100 கோடிக்கு மேல் இருந்தால் வாங்க, இல்லைனா வராதீங்க’ என்கிறாராம். நான் எந்த நடிகரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.’பீஸ்ட்’ படம் பற்றி என்னிடம் கேட்கிறார்கள். அந்தப்படத்தை பற்றி எனக்கென்ன கவலை. நான் விஜய் கிட்ட தேதியோ, பணமோ கேட்டு நிற்கப் போறதில்லை என்று கூறியுள்ளார்.