ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுள்ளது.
நாடு முழுவதும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்ததை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். இந்த புனித நாளில் கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆலயங்களுக்குச் செல்வார்கள். அங்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் பகுதியில் சவேரியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதனையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு இயேசு உயிர்ப்பு பெருவிழா திருப்பலி நடைபெற்றது.
இதற்கு ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கினார். இவர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி திருப்பலியை நிறைவேற்றினார். அதன்பிறகு ஆலயத்தில் கூடியிருந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இயேசுவின் நாமத்தை பாடினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேப்போன்று அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.