Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!!

பிரசித்தி பெற்ற ஆதிதேவி மகா மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதிதேவி மகா மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பால் குடம், காவடி போன்றவற்றை எடுத்து மேலவீதி, வடக்கு வீதி, கச்சார் குளம், கடைவீதி போன்ற நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்து  தங்களது நேர்த்திக்கடனை  செலுத்தினர்.

அதன் பின்னர் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து  பூஜையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர். இந்த திருவிழாவிற்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் சேதுராமன், கலையரசன் உள்ளிட்ட பலர் செய்துள்ளனர்.

Categories

Tech |