திருவண்ணாமலையில் கண்ணை கட்டி கொண்டே அனைத்தையும் சரியாக செய்யும் அரசு பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் நெசவுத் தொழில் செய்து வருபவர் முனுசாமி. இவருக்கு ஸ்ருதி, காஞ்சனா என்ற 2 மகள்கள் உள்ளனர். இருவரும் ஒரே பள்ளியில் படித்து வரும் வேளையில் ஸ்ருதி ஆறாம் வகுப்பும், காஞ்சனா மூன்றாம் வகுப்பும் படித்து வருகின்றார். இந்நிலையில் சுருதிக்கு யாரிடமும் இல்லாத தனித்திறமை ஒன்று இருந்துள்ளது.
அது என்னவென்றால் கண்களைக் கட்டிக்கொண்டு அனைத்தையும் அறியும் திறன் தான் அது, கண்களை காட்டியவாறு, ஒருவரை எந்தவித தடுமாற்றமும் இன்றி பின்தொடர்வது, ரூபாய் நோட்டுகளை சரியாக எண்ணுவது, படங்களை வரைந்து அதற்கு வண்ணம் தீட்டுவது, சைக்கிள் ஓட்டுவது, எதிரே இருப்பவர் என்ன நிற சட்டை அணிந்து இருக்கிறார் என்பதை சொல்வது உள்ளிட்ட பல வியப்பூட்டும் செயல்களை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் சென்று மாணவியை பார்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தந்தையுடன் வருமாறு அழைப்பு விடுத்தார். இதையடுத்து தனது தந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாணவி சென்று மாவட்ட ஆட்சியர் முன்பு தனது திறமைகளை காட்டினார். அதில்,
கண்ணை காட்டியவாறு தான் வரைந்த படத்திற்கு ஓவியம் தீட்டி, குறிப்பிட்ட அளவில் ரூபாய் நோட்டுக்களை சரியாக எண்ணி, அங்குள்ளோர் என்ன நிற சட்டைகள் அணிந்து இருக்கின்றனர் என்பதை சரியாக கூறியும் அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தினார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு முன்செல்ல கண்ணைக் கட்டிக் கொண்டு வேறொரு சைக்கிளில் சரியாக எந்தவித தடுமாற்றமும் இன்றி மாவட்ட ஆட்சியரை பின் தொடர்ந்து சென்றார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் அரசு பள்ளி மாணவியை பாராட்டினார். இதுகுறித்து மாணவி கூறுகையில் 4 மாதமாக மேற்கொண்ட யோகா பயிற்சியின் மூலமாக தான் இந்த திறமை வெளிப்பட்டதாக வர தெரிவித்தார்.