பயில்வான் ரங்கநாதன் கேட்ட கேள்விக்கு அதிரடி பதிலை தந்துள்ளார் அஜித்.
தமிழ் சினிமா படங்களில் வில்லனாக நடித்து தற்போது பத்திரிகையாளராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். இவன் நடிகர், நடிகைகளை பற்றி பேசி வெளியிடும் வீடியோவானது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது. இவரின் பேச்சுக்கு சினிமாவில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். இவர் சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்ததை விட தற்போது பத்திரிக்கையாளராகி மிகவும் பிரபலமாகியுள்ளார்.
இந்த நிலையில் அஜித்தை ஒருமுறை பேட்டி எடுக்கும் போது இவர், ஏன் முன்பு மாறி ரசிகர்களுடன் மிக நெருக்கமாக இல்லை? என கேட்டிருக்கின்றார். இதற்கு அஜித் கூறியதாவது, “என்னைப் பற்றி உங்களுக்கே தெரியும், உங்களுடன் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். நான் தனிமையை விரும்புகின்றவன். படத்திற்கு கண்டிப்பாக பப்ளிசிட்டி தேவை. ஆனால் அதையும் தாண்டி அவருக்கு ஒரு வாழ்க்கை இருக்கின்றது. நான் அதிக தோல்வி படங்களை கொடுத்து இருக்கின்றேன். என்னைப்போல் வேறு யாராவது இருந்திருந்தால் இந்நேரம் கண்டிப்பாக சினிமாவிலேயே இருந்திருக்க மாட்டார்கள். இப்போது நான் இங்கே இருக்க காரணம் ரசிகர்கள்தான். நான் ரசிகர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். வயது உள்ள போதே அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என பயில்வான் கேட்ட கேள்விக்கு அதிரடி பதிலை தந்துள்ளார்.