Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எப்படி நடந்திருக்கும்…. தீயணைப்பு துறையினரின் செயல்…. கடலூரில் பரபரப்பு….!!

பேக்கிரி கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள பாலக்கரை பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில் வேலு தனது கடைக்கு தேவையான இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் குடோனில் திடீரென புகை பரவி தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இது பற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீ பரவாமல் அணைத்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |