Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மீன் பிடிக்க சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் தொழிலாளியான முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அணைக்கட்டு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்து சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று முனியப்பனை மீட்க முயற்சி செய்தனர்.

அதற்குள் முனியப்பன் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியப்பனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |