Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

செல்பி எடுத்த சுற்றுலா பயணிகள்….. ஆவேசமடைந்த காட்டு யானைகள்…. பெரும் பரபரப்பு…!!

சுற்றுலா பயணிகளை காட்டு யானைகள் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக 9 காட்டு யானைகள் உலிக்கல், பில்லிமலை,  காட்டேரி, மரப்பாலம், பர்லியார் போன்ற இடங்களில் சுற்றித்திரிகிறது. இந்நிலையில் ரன்னிமேடு பகுதியில் சுற்றித்திரிந்த யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காட்டேரி பூங்காவில் சில சுற்றுலா பயணிகள் இருந்தனர். இவர்கள் யானைகளை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காட்டுயானைகள் சுற்றுலா பயணிகளை தூரத்தியுள்ளது. உடனே வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Categories

Tech |