உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கீழதிருத்தங்கல் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் செல்லசாமி மற்றும் வருவாய்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உரிய அனுமதி இன்றி பட்டாசுகள் தயார் செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி அனுமதியின்றி பட்டாசு தயாரித்து கொண்டிருந்த குற்றத்திற்காக மீனாட்சி சுந்தரம் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.