Categories
உலகசெய்திகள்

OMG: மரியு போல் நகரின் இன்றைய நிலை…. வெளியான வீடியோ…. நெஞ்சை உலுக்கும் காட்சி….!!!!!!

உக்ரைனின்  மரியு போல் நகரின் இன்றைய நிலையை வெளிப்படுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது. உக்ரைனை குறித்த வீடியோ மரிய போல் நகர கவுன்சில் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மரியு போல் நகர சபையால் வெளியிடப்பட்ட புதிய வீடியோ காட்சிகள் நகரின் கிழக்கு குடியிருப்பு மாவட்டத்தில் உள்ள அடுக்கு மாடி கட்டிடங்கள் அளிக்கப்பட்டு சிதைந்து கிடைப்பதை காட்டுகிறது.

மேலும் தென் கிழக்கு உக்ரைனில் உள்ள ஒரு துறைமுக நகரமான மரியு  போல் ரஷ்யாவின் போரின் தொடக்கத்தில் இருந்து அதிக குண்டு வீச்சுக்கு ஆளாகி இருக்கிறது. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் முக்கிய போர்க் கப்பல் மூழ்கியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கர ஆயுதங்களால் உக்ரைன் மீது சரமாரி தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

 

அதிலும் குறிப்பாக தலைநகர் கீவ், கார்கிவ், கெர்சன் மற்றும் மரியுபோலில் ரஷ்யா மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. இந்த நிலையில் உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர ரஷ்யா தீவிரமாக முயற்சி செய்து வருவதாக உக்ரைன் ஆயுத படைகளின்  ஜெனரல் தெரிவித்திருக்கிறார். மரியுபோல் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டல், இந்த போரில் இரு தரப்பினருக்கும் உளவியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |