Categories
தேசிய செய்திகள்

“பிரில்லியன்ட்”என எதை சொல்கிறார் ஆனந்த் மஹிந்திரா… வைரலாகும் பதிவு…!!!!!

மஹிந்திரா நிறுவனத்தின் அதிபர் ஆனந்த் மஹிந்திரா. இவர்  சுட்டுரையில் அவ்வப்போது ஏதேனும் புகைப்படங்களை பகிர்ந்து தனது கருத்துக்களையும் பதிவு செய்து வருவார். பொதுவாக பல வாகனங்களின் பின்பக்கத்தில் பல வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதை நாம் கவனித்திருப்போம். அந்த வகையில் பெயர் முதல் பொன் மொழிகள் வரை அதில் அடங்கும். இதையெல்லாம் அனைவரும் பார்க்கமுடியும். மேலும் வழக்கமான ஒன்றும் கூட. ஆனால் ஆனந்த் மகேந்திரா தனது சுட்டுரை பக்கத்தில் பகிர்ந்து இருப்பது மிகவும் வித்தியாசமான வாசகம் எழுதப்பட்டிருக்கும் வாகனம்.

 

 

 

அதாவது ஒரு சரக்கு பெட்டகம் ஏற்றப்பட்டிருக்கும் டிரக்கின்  பின் பக்கத்தில் ஆங்கிலத்தில் உங்களது வாகனத்தின் காற்று பையை  இங்கே பரிசோதிக்கவும் என எழுதப்பட்டிருக்கிறது. இதனை தனது சுட்டுரையில் பகிர்ந்து புத்திசாலி என்று அதனுடன் பதிவிட்டிருக்கிறார். வழக்கமாக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது சுட்டுரையில் பகிரும் தகவல்கள் பலவும் வைரல் ஆவது உண்டு.. அந்த வகையில் இந்த புகைப்படமும் பலராலும் விரும்பப்பட்ட வருகிறது.

Categories

Tech |