Categories
உலக செய்திகள்

முதல் தடவையாக புரத அடிப்படை தடுப்பூசி…. அனுமதி வழங்கிய சுவிட்சர்லாந்து…!!!

சுவிட்சர்லாந்து அரசு முதல் முறையாக புரத அடிப்படை தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது.

சுவிட்சர்லாந்து நாட்டில் அனுமதி பெற்று முதல் புரத அடிப்படையுடைய நுவாக்ஸோவிட் என்ற தடுப்பூசிக்கு சுவிஸ் மருத்துவ கட்டுப்பாடான ஸ்விஸ்மெடிக் கடந்த புதன்கிழமை அன்று அனுமதி வழங்கியிருக்கிறது. அந்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட நான்காம் கொரோனா தடுப்பூசி நுவாக்ஸோவிட் தான்.

Swissmedic படி, இத்தடுப்பூசி SaRS-CoV-2 வைரஸின் மேற்பரப்பிலிருந்து தொற்று இல்லாத கூறுகளை கொண்டிருக்கிறது. இத்தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதற்கு உறுதுணையாக உள்ளது. இந்த தடுப்பூசியை 21 நாட்கள் இடைவெளியில் இரண்டு தவணையாக செலுத்த வேண்டும்.

Categories

Tech |