Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்று திருக்கல்யாண வைபவம்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!!

பிரசித்தி பெற்ற கோதண்டராமர் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோதண்டராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ராம நவமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ராம நவமியை முன்னிட்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று  யானை வாகனத்தில் கோதண்டராமரையும், அன்னவாகனத்தில் சீதாதேவியும் எழுந்தருள செய்து வீதிஉலா நடைபெற்றது.

இதனையடுத்து சாமிகளுக்கு  பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு ஆபரணங்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு  திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த திருக்கல்யாணத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கல்யாண மண்டபத்தில் காட்சி அளித்த பெருமாளையும் தாயாரையும் தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |