Categories
அரசியல்

அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து ஜாக்பாட்…. ரூ.25 லட்சம் கிடைக்கும்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் வீடு வாங்குவதற்கு அரசு தரப்பில் இருந்து பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. சமீபத்தில் மத்திய அரசு தனது ஊழியர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்கியது. தற்போது மற்றொரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் வீடு கட்ட விரும்பினால் அவர்களுக்கு வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்கள் சலுகை வழங்கப்பட உள்ளது. வீடு கட்டும் சலுகைக்கான வட்டி விகிதம் 7.9 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாக குறைந்துள்ளது.

அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் இதில் பயன்பெறலாம். அரசின் இந்த அறிவிப்பால் சொந்தமாக வீடு கட்டுபவர்கள் மட்டுமல்லாமல் பிளாட், வீடு வாங்குபவர்களுக்கும் பலன் கிடைக்கும். ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வட்டி விகிதம் என்பது அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை இந்த சலுகை ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வீடு கட்டுவதற்கு முன் பணம் கேட்டு விண்ணப்பித்து இருந்தாலும், கடன் வழங்கப்பட்ட நாளில் இருந்து இந்த தொகை உங்களுக்கு கிடைக்கும்.

வங்கியில் திருப்பி செலுத்துவதற்கான முன் பணம் மொத்தமாக உங்களுக்கு வழங்கப்படும். இந்த சலுகை நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு கிடைக்கும். இருந்தாலும் தற்காலிக ஊழியர்களின் பணி தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும். வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய நாளில் இருந்து பணியாளர்களுக்கு வீடு கட்ட முன் பணம் கிடைக்கும். இந்த சிறப்பு வசதியின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் முப்பத்தி நான்கு மாதங்கள் வரை அல்லது அதிகபட்சமாக 25 லட்சம் வரை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஹவுஸ் பில்டிங் அட்வான்ஸ் விதிகளின்படி, வீட்டை விரிவாக்கம் செய்ய அல்லது புதுப்பிக்க மத்திய அரசு ஊழியர்கள் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் அல்லது 34 மாத அடிப்படை சம்பளம், வீட்டின் புதுப்பிப்பு அல்லது விரிவாக்கத்துக்கான செலவு அல்லது செலுத்தும் திறன் ஆகியவற்றை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். முதல் 15 ஆண்டுகளுக்கு நீங்கள் பிரின்சிபல் தொகையை செலுத்த வேண்டும். மீதமுள்ள ஐந்து ஆண்டுகளில் அதை வட்டியாக EMIயில் திருப்பி செலுத்த வேண்டும்.

 

Categories

Tech |