Categories
தேசிய செய்திகள்

மீன் குழம்பு சாப்பிட்டவர்களுக்கு வயிறு வலி…. பச்சை மீன் சாப்பிட்ட பூனைகள் பலி….!!!

மீன் குழம்பு சாப்பிட்டவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் பச்சை மீனை சாப்பிட பூனைகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

கேரள மாநிலம் இடுக்கி  நெடுங்கண்டம் தூக்கு பாலம் பகுதியில் மீன் குழம்பு சாப்பிடவர்களுக்கு வயிற்று வலி மற்றும் பச்சை மீன் சாப்பிட்ட பூனைகள் இறந்ததால் மீன் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த  சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுப்பதற்கு உணவு பாதுகாப்பு ஆணையருக்கு அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார்.

அமைச்சரின் உத்தரவின் பெயரில் உணவு பாதுகாப்புத் துறையினர் இன்று அப்பகுதியில் ஆய்வு செய்து உணவு மாதிரிகளை சேகரித்துள்ளனர். மீன்கள் கெட்டு போகாமல் இருக்க ரசாயன கலப்படம் செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |