தாயை தாக்கிய குற்றத்திற்காக மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் குழந்தைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான அழகம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பச்சைமுத்து என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த பச்சைமுத்து தனது தாயிடம் சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்துள்ளார்.
மேலும் அழகம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியுள்ளார். இது குறித்து அழகம்மாள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பச்சை முத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.