பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் அருகே வடுகன்பற்று பகுதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், மதுவர்தனி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் 2 பேரும் ஸ்கூட்டரில் இருளப்பபுரம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இவர்கள் சுசீந்திரம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் ரேணுகாவின் ஸ்கூட்டரின் மீது பலமாக மோதியது.
அப்போது நிலைத்தடுமாறி மதுவர்தனி மற்றும் ரேணுகா ஆகிய 2 பேரும் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்துள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ரேணுகாவின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பித்து சென்றுள்ளனர். அதன்பிறகு ரேணுகா மற்றும் மதுவர்தனி ஆகிய 2 பேரும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதுகுறித்து ரேணுகா சுசீந்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.