திருநங்கை உரிமை காக்க தமிழக அரசு தொடர்ந்து உழைக்கும் என திருநங்கையர் தினத்தை முன்னிட்டு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் கூறியிருக்கிறார். திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர் ரியா, தோழி அமைப்பு நிர்வாகி சுதா,கேத்ரின், இயன்முறை மருத்துவர்கள் செல்வி சந்தோஷம், மோனிகா போன்றோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் முதல்வரை சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு மு க ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். அதன்பின் டுவிட்டரில் அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், திருநங்கையர் கண்ணியம் காத்த கருணாநிதி காட்டிய சமூக நீதிப் பாதையில் நடைபோடும் திமுக அரசு திருநங்கை – திருநம்பி உரிமைக்காக தொடர்ந்து உழைக்கும் என கூறியுள்ளார்.