வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சீனிவாசன்(35). இவருக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிய நிலையில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். சீனிவாசன் தினந்தோறும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்ததால் அவரது தந்தை கோவிந்தராஜ் கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த சீனிவாசம் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை எடுத்து குடித்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.