Categories
தேசிய செய்திகள்

ஆதார் போலிகள், பிழைகள், குளறுபடிகள்….. அதிரவைக்கும் சிஏஜி அறிக்கை….!!!!

ஒவ்வொரு குடிமக்களின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு. அனைத்து விதமான தேவைகளுக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. “போலியாக உருவாக்க முடியாது. தனித் தன்மையோடு இருக்கும்” என்பது போன்ற பல்வேறு அடைமொழியுடன் அறிமுகம் செய்யப்பட்டது ஆதார் எண். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ஆதார் எண் உருவாக்கப்பட்டு கடந்த அக்டோபர் 2021 ஆம் ஆண்டு வரையில் சுமார் 131.68 கோடி பேருக்கு ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. மாநில அரசுகள் முதல் மத்திய அரசு வரை உள்ள நலத்திட்டங்கள் பெறுவதில் தொடங்கி புதிய அடையாள அட்டைகளை பெறுவது வரை அனைவருக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஆதாரில் நிறைய குளறுபடிகள் இருப்பதாக சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஆதாரில் உள்ள குறைபாடுகள், பிழைகள், பாதுகாப்பு இன்மை பற்றியும் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இப்போதுள்ள நடைமுறைப்படி விண்ணப்ப தேதியிலிருந்து முந்தைய 12 மாதங்களில் 182 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தில் இந்தியாவில் வசித்து இருந்தால் ஒருவருக்கு ஆதார் வழங்கப்படுகிறது. ஆனால் அவர் இந்தியாவில் எவ்வளவு காலம் வசித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஆதார் தனித்துவமானது எனவே ஒருவர் இரண்டு ஆதார் எண்களை பெற முடியாது என்பதற்கு மாறாக 4.7 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆதார் நகல்களை யுஐடிஏஐ ரத்து செய்துள்ளது. பல்வேறு அடையாள அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்ட நிலையில், அடுத்து வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வேலைகளை அரசு தொடங்கியுள்ளது. ஆதார் எண் அறிமுகப்படுத்தப்பட்டு 10 வருடங்கள் கடந்த பிறகும் கூட தற்போது ஆதார் எண் தொடர்பாக பல்வேறு குளறுபடிகள் தொடர்ந்து கொண்டே உள்ளது” என அந்த அறிக்கையில் சிஏஜி தெரிவித்துள்ளது.

Categories

Tech |