தமிழகத்தில் ஏப்ரல் 14 முதல் 17 வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கோடை வெயில் வாட்டி எடுத்து வருவதால் இந்த நீண்ட விடுமுறையை சரியாக பயன்படுத்திக் கொள்ள பலரும் திட்டமிட்டுள்ளனர். அவ்வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சுங்கச் சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன.
கொடைக்கானல் சுங்கச் சாவடியை கடந்து செல்வதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. அதனால் தங்களுடைய ஓட்டல் அறை மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதில் தமிழகம் மட்டுமின்றி கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநில சேர்ந்தவர்களும் உள்ளனர். அங்கு அதிக அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கொடைக்கானலில் உள்ள 12 சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து இயக்கப்படுகிறது. அதில் ஏறினால் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் சென்று ரசிக்க முடியும். இந்தச் சுற்றுலா பேருந்தில் பெரியவர்களுக்கு 150 ரூபாய் சிறுவர்களுக்கு 75 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினமும் காலை 8 மணி முதல் துவங்கும் இந்த சேவையை சுற்றுலா பயணிகள் , பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சீசன் காலங்களில் மட்டுமே இந்த சேவை இயங்கும்