Categories
மாநில செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பின்…. திருவண்ணாமலையில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்….!!!!

திருவண்ணாமலையில் நடக்கும் பிரசித்தி பெற்ற விழாக்களில் சித்ரா பவுர்ணமிக்கு தனி சிறப்பு உண்டு. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் திருவண்ணாமலைக்கு 2806 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

சித்ரா பவுர்ணமி செல்ல இன்று அதிகாலை 2.23 மணி முதல் நாளை அதிகாலை 1.17 மணி வரை உகந்த நேரமாக கணிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கவும், மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு கருவிகள் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |