ரஷ்யாவின் பாதுகாப்பு படையில் முக்கிய அங்கம் வகித்து வந்த மோஸ்கோ போர் கப்பல் கருங்கடலில் போருக்கான ஆயுதங்கள் வீரர்களுடன் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சூறாவளி காற்றினால் சேதமடைந்து மூழ்கியதாக ரஷ்ய பாதுகாப்பு வெளியுறவு துறை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு துறையின் பலத்தை பறை சாற்றும் வகையில் அமைந்திருக்கும் கப்பல் உக்ரைன் மீதான படையெடுப்பில் கடற்படை தாக்குதலை தலைமை தாங்கி நடத்தி வந்துள்ளது. அதேவேளையில் தங்களது ஏவுகணை போர்க்கப்பலை தாக்கியதாக கிவ்விலிருந்து தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஆனால் இதுபோன்ற தாக்குதல்கள் குறித்து மோஸ்கோ தரப்பில் எந்தவித தகவலும் இதுவரை இல்லை. போர்க் கப்பலில் தீ பிடித்ததால் மூழ்கியதாக கூறப்பட்டுள்ளது. போர்க்கப்பலில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் தீப்பிடித்தால் கப்பல் மூழ்கியது. மேலும் தீ பிடித்ததில் இருந்து 500க்கும் மேற்பட்ட கடற்படையினர் பாத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது.