Categories
தேசிய செய்திகள்

ராமேஸ்வரம் பஞ்சாங்கத்தில் பல திடுக் தகவல்கள்…. பீதியில் மக்கள்….!!!

நடப்பாண்டு தமிழகத்தில் 7அதிதீவிர புயல்கள் உருவாகி கன மழை பெய்து வெள்ளத்தில் மிதக்கும் என்ற ராமேஸ்வரம் கோவில் பஞ்சாங்கம் வாசிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டான நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இணை ஆணையர் பழனிகுமார் முன்னிலையில் கோவில் குருக்கள் உதயகுமார் மற்றும் ஆற்காடு சீதாராமய்யர் எழுதிய பஞ்சாங்கத்தை வாசித்தனர். அதில், வருகின்ற அக்டோபர் முதல் டிசம்பர் வரை 19 புயல் சின்னங்கள் உருவாகி அதில் ஏழு அதி தீவிர புயலாக வீசும்.

இதனால் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உச்சத்தை தொடும். கோவில் நகைகளை அரசு உருக்கி கருவூலத்தில் பாதுகாக்க வேண்டிய சூழல் உருவாகும். சில அரசியல் தலைவர்கள் பெரும் நஷ்டத்தை சந்திப்பர். மேலும் இரண்டு அல்லது மூன்று மாநிலங்கள் உருவாகக்கூடும்.

இந்தியாவுக்கு அயல் நாடுகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வடநாடு வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கும். கோயில் சொத்துக்களை அரசு கையகப்படுத்தும். அறநிலையத் துறையில் மாற்றம் நிகழும். வெளிமாநிலத்தவரால் திருடர் பயம் அதிகரிக்கும்.ராமேஸ்வரத்தில் கடல் நீர் திடீரென உருவாகும் உள்ளிட்ட பல்வேறு குறிப்புகள் அதில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறான அதிர்ச்சி தகவல்கள் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.

Categories

Tech |