கொரோனா காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருந்த 10, 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) ரத்து செய்தது. அதன்பிறகு நடப்பு கல்வியாண்டுக்கான பொது தேர்வை இரண்டு அமர்வுகளாக நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்தது. இதையடுத்து முதல் அமர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. இரண்டாம் அமர்வு இந்த மாத இறுதியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டு அமர்வுகள் கொண்ட நடைமுறை இனி தொடராது என்றும், பழைய முறைப்படி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரிய தேர்வுகள் தொடரும் எனவும் சிபிஎஸ்இ தற்போது தெரிவித்துள்ளது. பகுப்புகள் வழக்கம்போல முழு அளவில் செயல்பட தொடங்கியுள்ளதால் இந்த முடிவை சிபிஎஸ்சி எடுத்துள்ளதாக தெரிகின்றது. இருந்தாலும் மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் உரிய விகிதத்தில் பாட அளவு குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.