Categories
அரசியல் மாநில செய்திகள்

“அம்பேத்கருக்கு இன்னுமொரு பிறந்தநாள்”…. முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த வைரமுத்து….!!!!

சென்னை ஆவடி அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்புக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அப்போது ஊசிமணி, பாசி மணி மாலைகள் அணிவித்து நரிக்குறவர் இன மாணவிகள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து மாணவி இல்லத்தில் தேனீர் அருந்திய ஸ்டாலின், பின்னர் அவர்கள் கொடுத்து இட்லி, வடையுடன் சிற்றுண்டி உணவு சாப்பிட்டார். அப்போது அவர் அருகே நின்று கொண்டிருந்த நரிக்குறவர் மாணவி ஒருவருக்கு ஸ்டாலின் இட்லியை ஊட்டி விட்டார்.

இந்நிலையில் நரிக்குறவர் இன மக்கள் வீட்டில் முதல்வர் ஸ்டாலின் உணவருந்தியதை வைரமுத்து கவிதை வாயிலாக பாராட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், முதலமைச்சர் வந்தால் கறி சோறு போடும் என்கிறார்கள்,கறி சோறு போட்டு நாங்கள் வாக்கு தவறாதவர் கள் என்று மெய்ப்பித்து விட்டார்கள் நரிக்குறவர் இனத்தில் நல்ல மக்கள். அதை சாப்பிட்டு நான் நாக்கு தவறாதவன் என்று மெய்ப்பித்து விட்டார் முதல்வர். அம்பேத்கருக்கு இன்று இன்னொரு பிறந்தநாள்”என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |