7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள முள்ளிமுனை பகுதியில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். பெயிண்டரான இவர் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் சைல்டு லைன் அமைப்பினருக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரிட்டா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி முனீஸ்வரனை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்துள்ளனர்.