ஜார்க்கண்டில் ராஞ்சி நகரில் நேற்று இரவு ஒரு பெண் தன் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அவருடன் வந்த மற்றொரு நபர் நடுவழியில் 5 நபர்களை போனில் அழைத்துள்ளார். இதையடுத்து அவர்கள் வந்ததும் அனைவரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின் அந்த பெண்ணின் தோழியையும் சம்பவ பகுதிக்கு வர சொல்லும்படி கட்டாயப்படுத்தி இருக்கின்றனர்.
அதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற தோழியையும் அந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் 2வது பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட அந்த கும்பலை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய 6வது நபரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.