Categories
உலக செய்திகள்

குண்டுவீச்சு தாக்குதல் நடத்துறாங்க…. ரஷ்யா வைத்த பரபரப்பு குற்றசாட்டு…..!!!!!

ரஷ்யாவின் எல்லையோர நகரங்களில் உக்ரைன் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா குற்றச்சாட்டு வைத்துள்ளது. மேலும் உக்ரைனின் இத்தாக்குதலில் குழந்தை உட்பட 7 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது “கனரக ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு ரஷ்யவான் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த உக்ரைன்நாட்டின் 2 ராணுவம் ஹெலிகாப்டர்களானது, Bryansk பகுதியிலுள்ள குடியிருப்பு கட்டிடங்களின் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு ரஷ்யஎல்லைக்குள் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிகாரப்பூர்வமாக ரஷ்யா குற்றம் சாட்டியது இதுவே முதன் முறையாகும். ரஷ்யாவில் இந்த குற்றச்சாட்டை உக்ரைன் நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |