Categories
மாநில செய்திகள்

வெறும் காட்சிப் பொருளாகவே இருக்கிறது…. கோர்ட்டில் பச்சை பொய் சொன்ன தமிழக அரசு… அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!!

மெட்ரோ ரயில், ஓலோ, உபேர் என்று என்னதான் இன்று போக்குவரத்து வசதி பெருகி வந்தாலும் மருத்துவமனைக்கு செல்வது, திருமணம் போன்ற விசேஷங்களுக்கு போவது என அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் இன்றும் தெருமுனைகளில்  உள்ள ஆட்டோக்களை நம்பியிருக்கின்றனர். அன்றாட போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு இவற்றின் பயண கட்டணத்தை வரையறுத்து அதனை செயல்படுத்த திமுக ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தப்பட்டிருந்தது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை பொறுத்து பயண கட்டணத்தை நிர்ணயித்து இரவு நேர பயணத்திற்கு 50 சதவீத கூடுதல் கட்டணத்தை வரையறுத்து அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் அதிக கட்டணம் வசூலித்து பயணிகள் ஏமாற்றப்படுவதை தடுக்க ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவது தொடர்பாக 2013ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்துள்ள இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கடந்த 2013ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் படி அனைத்து ஆட்டோக்களிலும் எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டு இருப்பதாகவும், அதன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுவது பிரிண்டர் பொருத்த அதிக செலவாகும் என்பதால் அதனை பொருத்தம் இல்லை எனவும் தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கூறியிருந்தார். ஆட்டோக்களில் மீட்டர் இன்றளவும் வெறும் காட்சிப் பொருளாகவே இருக்கின்ற நிலையில், அனைத்து ஆட்டோக்களிலும் எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் அதன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க படுவதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் பச்சை பொய் சொல்வது மக்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது.

தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களில் மீட்டர் இயக்கப்படுகிறதா  இல்லையா இது தொடர்பாக பயணிகளிடம் இருந்து எதிர்ப்புகள் பெறப்பட்டுள்ளதா புகார்கள் மீது நடவடிக்கைகள் என்ன என்பதை போக்குவரத்து காவல் துறையிடம் கோட் ரிபோட் கேட்டால் போதும். இந்த விஷயத்தில் தமிழக அரசு கோர்ட்டில் பச்சை பொய் சொல்லி இருக்கிறது என வெட்ட வெளிச்சமாகும் என குமுறுகின்றனர் பொதுமக்கள்.

Categories

Tech |