பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பெரும்பான்மை காட்ட முடியாததால் பதவியை பறிகொடுத்த இம்ரான்கான், பெஷாவரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரை ஆற்றினார். அப்போது இம்ரான்கான் கூறியதாவது “நான் பிரதமராக இருந்தபோது ஆபத்தானாவனாக இல்லை. ஆனால் இப்போது மிகவும் ஆபத்தானவனாக மாறியுள்ளேன். என்னை பிரதமர் பதவியிலிருந்து நீக்க சட்டவிரோத செயல்கள் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் முன்பு நள்ளிரவில் நீதிமன்றம் திறக்கப்பட்டது ஏன்..? நான் எதாவது சட்டத்துக்கு புறம்பானதை செய்து விட்டேனா..? இறக்குமதி செய்யப்பட்ட அரசாங்கத்தினை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்கள் மேற்கொண்டு மக்கள் தாங்கள் விரும்பியதை வெளிப்படுத்தலாம்”என்று கூறினார்.