நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் அனைத்து மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக மக்கள் எங்கு சென்றாலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை வெகுவாக தளர்த்தியுள்ளது.
இதில் முக்கியமாக பொது முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரயில் பயணிகள் மாஸ்க் அணிவது கட்டாயம் அல்ல என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக ரயிலில் பயணம் செய்பவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக இருந்தது. தற்போது கொரோனா குறைந்ததால் இந்த தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது சேரும் இடத்தின் முகவரியை குறிப்பிட வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்பட்டது.