அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து தி.மு.க. சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ விழா நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதியரசன், கூட்டுறவு கடன் சங்க தலைவர் தமிழரசன், தகவல் தொழில் நுட்ப அணி அன்பரசன்,பொறுப்பு குழு உறுப்பினர் மலைமேகு, தனபால், செயலாளர் ராமச்சந்திரன், முத்துக்குமார், மாணிக்கம், சுப்ரமணியன், தகவல் தொழில் நுட்ப அணி கண்ணன், பிரவீன், ஒன்றிய மகளிர் அணி பஞ்சவர்ணம், தேவி அழகர்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அனைவரும் சேர்ந்து அம்பேத்கரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியுள்ளனர்.