Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பாட்டியுடன் பஸ்ஸில் அமர்ந்து கொண்டிருந்த சிறுவன்… “சிறுவனின் கழுத்தில் இருந்த 2 1/4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள்”…!!!

பஸ்ஸில் அமர்ந்து கொண்டிருந்த சிறுவனிடம் 2 1/4 பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறிவேப்பிலான் கேட் பகுதியில் வாழ்ந்து வருபவர் 61 வயதுடைய சோலையம்மாள். இவர் தனது பேரனான சாய்சேஷனுடன் புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் டவுன் பஸ்ஸில் அமர்ந்திருந்தபோது பேரனின் கழுத்தில் இருந்த 2 1/4 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து நகர போலீஸ் நிலையத்தில் சோலையம்மாள் புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Categories

Tech |