விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தவறான தகவல் கொடுத்த 19 வயது இளைஞரை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் டோரி கார்த்திக் என்பது தெரிய வந்தது. அவரை ரயில்வே காவல்துறை மற்றும் மாநில காவல்துறை கூட்டுக் குழு கைது செய்து சிறையில் அடைத்தது. ஏப்ரல் 13-ஆம் தேதி 100 என்ற எண்ணுக்கு போன் செய்து ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறையுடன் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் விசாகப்பட்டினத்தில் இருந்து மும்பைக்கு வந்த இரண்டு ரயில்களை ரயில்வே போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த செய்தி போலியானது என்பது தெரியவந்தது. போலிஸ் விசாரணையில் கார்த்திக் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரை ரயில்வே காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.